Last Updated : 16 Jan, 2020 07:06 PM

 

Published : 16 Jan 2020 07:06 PM
Last Updated : 16 Jan 2020 07:06 PM

நிர்பயா குற்றவாளிகள் மரண தண்டனை தாமதமடைய ஆம் ஆத்மி ஆட்சியின் அலட்சியமே காரணம்: பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு ஆம்-ஆத்மி அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கிலிட டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை சுப்ரீம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: “நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது தாமதமாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அலட்சியமே காரணம். நீதிக்கிடைக்கத் தாமதமாவதற்கு ஆம் ஆத்மி அரசே காரணம்.

குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பாமல் இருந்தது ஏன்? இதன் மூலம் பலாத்கார குற்றவாளிகள் மீது இவர்கள் கருணை கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

டெல்லி அரசின் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா நீதிமன்றத்தில் கூறும்போது, ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்கிறார், நாடு முழுதும் இந்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர், ஆனால் இவர்கள் தாமதம் செய்கின்றனர். டெல்லி அரசின் வழக்கறிஞர் மேல்முறையீட்டுக்கு இன்னும் அவகாசம் உள்ளது என்கிறார், யார் இந்தக் கூடுதல் நேரத்தை அளித்தது? டெல்லி அரசின் அலட்சியம்தான்” என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x