Published : 16 Jan 2020 05:41 PM
Last Updated : 16 Jan 2020 05:41 PM

இந்தியா-பாக். இடையே பதற்றம் ஆப்கான் மீதும் தாக்கம் செலுத்துகிறது: முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமித் கர்ஸாய்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் உள்ள துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை உள்ளது ஆப்கானிஸ்தானை பெரிய அளவில் தாக்கம் செலுத்துகிறது, என்று முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமித் கர்ஸாய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெறும் ரைசினா உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹமித் கர்ஸாய் கூறியதாவது:

இந்தியாவுடன் சிறந்த நட்புடன் இருந்து வருகிறோம், ஆனால் அதே வேளையில் பாகிஸ்தானுடனும் சிறந்த சகோதரர்களாக இருப்போம் என்பதை நாங்கள் எப்படி கூற முடியும்? ஆப்கானுக்கு வேறு வழியில்லை, அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

பாகிஸ்தானிய மக்கள் எங்கள் நாட்டு அகதிகளை இருகரம் கொண்டு வரவேற்கின்றனர். அதற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக மிக சீரியஸான புகார்களும் எங்களுக்கு இருக்கின்றன. அதாவது பயங்கரவாதம் என்ற விஷயத்தில் எங்களுக்கு பாகிஸ்தான் மீது புகார்கள் உள்ளன. இது இருதரப்பு உறவை நிர்வகிப்பதில் அது சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

பாகிஸ்தானுடன் சிறந்த முறையில் உறவுகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால் ஆப்கானில் அமைதி இருக்காது.

அமெரிக்காவில் ஆப்கன் படைகள் இருப்பதை பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர். ஆப்கன் மக்கள் மரியாதைக்குரிய விதத்தில் வாழ்வதிலும், அரசியல், நிறுவனங்கள் இதில் தலையீடு இல்லாத வரையிலும் அமெரிக்கப் படைகள் அங்கு இருப்பதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர், என்றார் ஹமித் கர்ஸாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x