Last Updated : 16 Jan, 2020 01:05 PM

 

Published : 16 Jan 2020 01:05 PM
Last Updated : 16 Jan 2020 01:05 PM

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒரே வழி அமெரிக்காவைப் போல் நடந்து கொள்வதே.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அதிரடி

தீவிரவாதத்தை ஒழிக்க ஒரே வழி இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

அவருடைய பேச்சில் நேரடியாக பாகிஸ்தானின் பெயர் இடம்பெறாவிட்டாலும்கூட அது பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை தொனியிலேயே அமைந்துள்ளது.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிபின் ராவத் அளித்த பேட்டியில், "ஒரு சில நாடுகள் பயங்கரவாதிகளை ஆதரித்து, அவர்களுக்கு ஆயுதமும், நிதியும் கொடுத்து வளர்க்கும்வரை பயங்கரவாதம் ஒழியாது.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால், செப்டம்பர் 9-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்டத் தாக்குதலுக்குப் பின்னர் அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளைப் பின்பற்றினார்களோ அதனை நாமும் பின்தொடர வேண்டும்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச அளவில் முடுக்கிவிட்டது.

பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தியது. அதாவது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை பாய்ந்தது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார அதிரடி நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

இதுபோன்று ராஜதந்திரமாக செயல்பட்டு பயங்கரவாத நாடுகளைத் தனிமைப் படுத்துவது அவசியம். அப்படிச் செய்தால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்" என்றார்.

செப். 11 தாக்குதல்..

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, அல்கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் 4 விமானங்களை கடத்தினர்.

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது ஒரு விமானத்தை மோதி தகர்த்தனர். இதில் அந்த இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வர்த்தக மைய கட்டிடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர்.

இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் பலியாகினர். 4-வது விமானத்தை கடத்திய தீவிரவாதிகளுக்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்து, முடிவில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.

அதன்பின்னர் அமெரிக்கா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றது. மேலும், பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகளை விதித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x