'அர்ஜூனன் அம்பில் அணு ஆயுதம்': மேற்குவங்க ஆளுநர் பேச்சால் சர்ச்சை

'அர்ஜூனன் அம்பில் அணு ஆயுதம்': மேற்குவங்க ஆளுநர் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

மகாபாரதப் போரில் அர்ஜூனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்ததாக மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில், பிர்லா தொழில்நுட்ப காட்சியகத்தில் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், "விமானம் 1910-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் நம் தேசத்தின் இதிகாசங்களை ஆழ்ந்து படித்தால் ராமாயண காலத்திலேயே ஆகாய விமானங்களுக்கு நிகரான வாகனங்கள் இருந்தன என்பது புரியும். அதேபோல் மகாபாரதத்தில் அர்ஜூனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது. உலக நாடுகள் இந்தியாவைப் புறக்கணித்துவிட முடியாது" என்றார்.

அவரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கு முன்னதாக பாஜக தலைவர்கள் பலரும் இதுபோன்ற கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மேறுவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த நவம்பர் 2019-ல் பசும்பாலில் தங்கம் இருக்கிறது எனப் பேசியிருந்தார்.

ஆனால் இம்முறை ஆளுநர் ஒருவரே அரசியல் பிரமுகர் போல் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in