

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகி றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனி மொழி, எம்பி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்கு னர் சரத்குமார் ஆகியோர் ஆஜராகி சாட்சியங்களை பதிவு செய்துள் ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிர்வாகி ஷாஹித் உஸ்மான் பல்வா சாட்சியம் அளித்த போது, 600-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு முறையற்ற பதில்களை அளித்திருந்தார். இதனால், கோபமான நீதிபதி ஓ.பி.ஷைனி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசார ணைக்கு எடுத்துள்ளார். பல்வா சார்பில் பிரபல மும்பை வழக்கறி ஞர் மஜீத் மேமன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆகியோர் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
இந்த வழக்கில் வியாழக் கிழமை தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தி ருந்தார். அதற்காக ஷாஹித் பல்வா உள்ளிட்டோர் நீதிமன்றத் தில் காத்திருந்தனர்.
வழக்கில் தொடர்புடைய ஆ.ராசா வும் நீதிமன்றத்தில் காத்திருந்தார். இறுதியில், இந்த வழக்கின் தீர்ப்பை வெள்ளிக் கிழமை அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.