

ஜே.என்.யு. வில் ஜனவரி 5ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் “யுனைடட் அகெய்ன்ஸ்ட் லெஃப்ட்” மற்றும் “ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஆர்எஸ்எஸ்” என்ற இரண்டு வாட்ஸ் அப் குழுக்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூகுள் மற்றும் வாட்ஸ் அப் இது தொடர்பாக இந்தக் குழுக்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் போலீஸ் தரப்பில் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி மேலும் தன் உத்தரவில், சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் அனைத்தையும் போலீஸாரிடம் ஒப்படைக்க ஜே.என்.யு. நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கைத் தொடர்ந்த ஜே.என்.யு பேராசிரியர்கள் மூன்றுபேர் வன்முறை தொடர்பான தரவுகளை சமூகவலைத்தளங்கள் பாதுகாக்கக் கோரி மனுவில் கோரியிருந்தார்.
அந்த மனுவில், “முன் கூட்டியே சதியைத் திட்டமிடாமல் அவ்வளவு பெரிய கும்பல் வளாகத்துக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. இவர்கள் அனைவரும் பல்கலை.யைச் சேர்ந்தவர்கள் அல்ல வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற ஐயம் உள்ளது, முன் கூட்டியே சதித்திட்டம் தீட்டாமல் முகமூடி அணிந்து கொண்டு அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த மனுதாரர்கள்தான் “யுனைடட் அகெய்ன்ஸ்ட் லெஃப்ட்” மற்றும் “ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஆர்எஸ்எஸ்” என்ற வாட்ஸ் அப் குழுக்களின் தரவுகளைப் பராமரித்து அளிக்குமாறு தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.