Published : 14 Jan 2020 10:06 AM
Last Updated : 14 Jan 2020 10:06 AM

'மோசமானது’ - சிஏஏ குறித்து மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா

மான்ஹட்டனில் ஜனவரி 13ம் தேதியன்று எடிட்டர்களைச் சந்தித்த மைக்ரோ சாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மோசமானது என்று விமர்சனம் செய்த முதல் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன அதிகாரியானார்.

“எது நடந்து கொண்டிருக்கிறதோ அது வருத்தமளிக்கக் கூடியது, அது மோசமானது... ஒரு வங்கதேசத்தவர் இந்தியாவில் குடியேறி இந்தியாவில் அடுத்த யூனிகார்னை தயாரிப்பதையோ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவை மேற்கோள் காட்டி பஸ்ஃபீட்நியூஸ்.காம் இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் ட்வீட் செய்துள்ளார்.

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பிப்.2014 முதல் இருந்து வருகிறார்.

மேலும் மைக்ரோசாப்ட் இந்தியா வெளியிட்டுள்ள குறிப்பில் சத்யா நாதெள்ளா சிஏஏ பற்றி கூறும்போது, “எந்த ஒருநாடும் தன் எல்லைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும், செய்து கொள்ளும், அதன்படி தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும், குடியேற்ற விதிமுறைகளை வகுக்கும். ஜனநாயக நாடுகளில் மக்களும் அரசுகளும் இது குறித்து விவாதித்து அந்த எல்லைக்குள் விளக்கமளித்துக் கொள்ளும்.

என்னுடைய இந்தியப் பாரம்பரியம், இந்தியப் பன்முகக் கலாச்சாரத்தில் வளர்ந்தது, அமெரிக்காவில் என்னுடைய குடிப்பெயர்வு அனுபவம் ஆகியவைதான் என்னை வடிவமைத்தது. குடியேறிய ஒருவர் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதையோ அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை தலைமையேற்று இந்தியச் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக மாறுவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x