காசி விஸ்வநாதர் கோயில் கருவறைக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடு: பேன்ட், ஜீன்ஸ் அணிய அனுமதியில்லை

காசி விஸ்வநாதர் கோயில் கருவறைக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடு: பேன்ட், ஜீன்ஸ் அணிய அனுமதியில்லை
Updated on
1 min read

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் பக்தர்கள் கோயிலின் கருவறைக்குள் நுழைய என்னென்ன உடை அணிந்துவரவேண்டும் என்று ஆடைக் குறியீட்டை (Dress Code) அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

வேறெந்த பெரிய கோயிலிலும் இல்லாத ஒரு விதியாக வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் கோயிலின் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவரை எந்த ஆடை அணிந்தும் வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் தற்போது கருவறைக்குள் செல்ல ஆடைக்குறியீட்டை கோயில் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

புதிய விதிப்படி, ஆண் பக்தர்கள் இந்திய பாரம்பரியமான 'தோதி - குர்தா' (வேட்டி, குர்தா) அணிய வேண்டியிருக்கும், பெண்கள் வளாகத்திற்குள் நுழைந்து தெய்வத்தை வணங்க புடவை அணிய வேண்டியிருக்கும்.

பேன்ட், ஷர்ட், ஜீன்ஸ் அணிந்துவரும் பக்தர்கள் தூரத்திலிருந்து மட்டுமே தெய்வத்தை வணங்க முடியும். அவர்கள் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இது குறித்த முடிவை காசி வித்வத் பரிஷத் எடுத்தது. இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலய நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in