Published : 12 Jan 2020 05:02 PM
Last Updated : 12 Jan 2020 05:02 PM

பழம்பெரும் கொல்கத்தா துறைமுகத்திற்கு  டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி  பெயரை சூட்டினார் பிரதமர் மோடி

கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

முன்னதாக இன்று காலை கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர், கொல்கத்தா துறைமுகம் இந்திய நாட்டின் தொழில், ஆன்மிகம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இந்த துறைமுகத்தை நவீன இந்தியாவின் அடையாளமாக மாற்றுவது நமது கடமை என்று அவர் கூறினார்.

கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதிய ஜனசங்கத்தை தோற்றுவித்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படுகிறது என்று அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடும் நோக்கில் டாக்டர் அம்பேத்கர் பெயரை குறிப்பிட்ட மோடி, டாக்டர் முகர்ஜியும், டாக்டர் அம்பேத்கரும் அரசிலிருந்து விலகிய பிறகு அவர்களது ஆலோசனைகள் அமலாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் செய்யப்படவில்லை.

இன்று இந்தத் துறைமுகம் 150வது ஆண்டைக் கொண்டாடுகிறது, இதனை ‘புதிய இந்தியா’வின் சின்னமாக மாற்றுவது நம் பொறுப்பில்தான் உள்ளது, என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x