

டெல்லி கன்ட்டோன்மெண்ட் தொகுதியில் இருந்து தேர்வானவர் சுரீந்தர் சிங். இவர் நகராட்சி கவுன்சில் உறுப்பினரும் ஆவார். நேற்று முன்தினம் இரவு டெல்லி துக்ளக் சாலையில் நகராட்சி பணியாளர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களைச் சோதிக்கும் தங்கள் வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் இ-ரிக்ஷா ஒன்றை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் சில ஆவணங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் அங்கு திடீரென வந்த சுரீந்தர் சிங், முகேஷ் என்ற பணியாளரை தாக்கியதாக சுகாதார ஆய்வாளர் ஆர்.ஜே.மீனா புகார் அளித்துள்ளார் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, "இதைத் தொடர்ந்து சுரீந்தர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்.சி/எஸ்.டி சட்டம் ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து கருத்து கூற சுரீந்தர் சிங் மறுத்துவிட்டார்.