

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு தொடங்கி தற்போது வரை நீடித்து வரும் இச்சண்டையில் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "பூஞ்ச் மாவட்டம் மாந்தி பகுதி, கிருஷ்ண காட்டி பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஞாயிறு இரவு 9.30 மணியளவில் இத்தாக்குதல் தொடங்கியது. ரஜோரி மாவட்டம் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது" என்றார்.
எல்லையில் இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.