Published : 10 Jan 2020 07:52 AM
Last Updated : 10 Jan 2020 07:52 AM

கடந்த 2018-ல் சராசரியாக தினமும் 80 கொலை, 91 பலாத்கார சம்பவங்கள்

புதுடெல்லி

கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் சராசரியாக தினமும் 80 கொலை மற்றும் 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்ததாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) கடந்த ஆண்டில் நாடு முழுவதும் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 31,32,954, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் 19,41,680 வழக்குகள் என ஒட்டுமொத்தமாக 50,74,634 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2017-ல் பதிவான 50,07,044 வழக்குகளைவிட அதிகம்.

இதுபோல கடந்த 2018-ம் ஆண்டில் 29,017 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டைவிட (28,653) 1.3 சதவீதம் அதிகம். 2017-ல் 95,893 ஆக இருந்த கடத்தல் வழக்குகள் 10.3 சதவீதம் அதிகரித்து 1,05,536 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80,871 பேர் பெண்கள் ஆவர்.

2017-ல் 3,59,849 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 2018-ல் 3,78,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 33,356 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2017-ல் 32,559 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x