

சூரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று பள்ளிக்குழந்தைகள் சென்ற பேருந்து அருகே மீது உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக பள்ளிக்குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. அப்போது திடீரென நிலை தடுமாறிய மினி லாரி உருண்டு விபத்துக்குள்ளானது. அந்த இடத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரிக்கு மிக அருகில் வந்த பேருந்தை ஒட்டுநனர் நிறுத்தினார்.
அப்போது திடீரென லாரியில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் அந்த பகுதியே வெடிகுண்டு விபத்து நிகழ்ந்த பகுதி போன்று காணப்பட்டது.
அருகே பள்ளி பேருந்து நின்றதால் பதற்றம் ஏற்பட்டது. பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிலிண்டர் வெடித்த துகல்கள் சிதறி பேருந்தும் தீ பிடித்து எரிந்தது.
சிலிண்டர் விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் குழந்தைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.