Last Updated : 08 Jan, 2020 07:34 PM

 

Published : 08 Jan 2020 07:34 PM
Last Updated : 08 Jan 2020 07:34 PM

உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 21 வயது பெண் தற்கொலை- மிரட்டல் காரணம் என சந்தேகம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக யோகி அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் சட்டக்கல்வி படிக்கும் 21 வயது பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பாக கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் உ.பி. பாரபங்கியில் உள்ள கிராம வீட்டில் தூக்கில் தொங்கினார். பாலியல் வன்கொடுமையில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் இந்தப் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்ததாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் புகார் எழுப்பினார்.

ஜஹாகிர்பாத் போலீஸ் சரகத்தில் உள்ள கிராமத்தில் தன் வீட்டில் இந்தப் பெண் தூக்கில் தொங்கியது அங்கு பரபரப்பானது. இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தாயார் கூறுகையில் ஷிவ்பல்தன், சிவக்குமார் ஆகியோர் தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றார்.

இதில் சிவக்குமார் ‘உள்ளூர்’ செல்வாக்கு மிக்கவர் என்பதால் போலீஸார் முதலில் எஃப்.ஐ.ஆர். போடவில்லை. பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது, ஆனால் கைது செய்யப்படவில்லை என்று தாயார் குற்றம்சாட்டினார்.

ஆனால் போலீஸ் உயரதிகாரியான ஆகாஷ் தோமர் என்பவரோ பெண்ணின் தந்தை தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரி தோமர் கூறும்போது, “தற்கொலை செய்து கொண்ட பெண் மற்றும் அவரது தாயார் மீது குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மோசடி புகார் அளித்தனர். அதாவது வாகனம் வாங்க வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளனர் என்றும் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேடெடதால் தாயார் இருவர் மீதும் புகார் அளிக்கிறார் என்றும் எங்கள் விசாரணையில் தெரியவந்தது. கூடுதல் விசாரணையில் வேறு ஏதாவது தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x