

கடந்த 1990-91-ம் ஆண்டில் 3 முக்கிய நிகழ்வுகள் நடந்ததைப் போல், 2020-ம் ஆண்டு தொடக்கத்திலும் நடக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
தேஜா வூ என்பது ஏற்கனவே, எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவங்களைப் போல் மீண்டும் நடப்பது போன்ற நினைவை உண்டாக்குவதாகும்.
கடந்த 1990-91-ம் ஆண்டில் நிகழ்ந்த 3 முக்கிய நிகழ்வுகளைப்போல் 2020-ஆண்டிலும் நடந்து வருகின்றன. 1991-ம் ஆண்டில் மாணவர்கள் போராட்டம், வளைகுடா நாடுகளில் பதற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் வந்தன. அதேபோன்று தற்போது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் விடுதிக் கட்டண உயர்வு, தேர்வுக்கட்டண உயர்வை எதிர்த்தும் மாணவர்கள் கடந்த சிலவாரங்களாகப் போராடி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களும், முஸ்லிம்களும், எதிர்க்கட்சியினரும் போராடி வருகின்றனர்.
மேலும், வளைகுடா நாடுகளில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மத்தியபட்ஜெட்டில்அறிவிக்கப்படஉள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்த மூன்று சம்பவங்களும் கடந்த 1990-91 ம்ஆண்டு நடந்த நிகழ்வுகளுக்கு ஒத்ததாக இருக்கின்றன.
கடந்த1990-91-ம் ஆண்டில் இட ஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.
அதே ஆண்டில் ஈராக் அதிபர் சதாம் ஹூசைனுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் மத்தியகிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு, கச்சா எண்ணெய்விலை கடுமையாக அதிகரித்தது.
மூன்றாவது முக்கிய நிகழ்வாக 1991-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முதன்முதலாக அறிமுகம் செய்தார்.
அதேபோன்று வரும் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய உள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகச் சரிந்துவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், கடந்த 1990-91 ஆண்டு இந்த இந்தியாவின் பொருளாதார நிலையோடு இப்போதுள்ள நிலையை ஒப்பிட முடியாது. பொருளாதாரத்திலும், அன்னியச் செலாவணி கையிருப்பிலும், வர்த்தகப்பற்றாக்குறையிலும் இப்போது இந்திய அரசு சிறப்பாகவே இருக்கிறது. இருப்பினும் அதேபோன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் 1990-91-ம் ஆண்டை நினைவு படுத்தும் தேஜா வூ வாக அமைந்துள்ளன