கருத்துக் கணிப்பில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கருத்துக் கணிப்பில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

இது தொடர்பான தகவலை நிறுவன விவகாரங்கள் மற்றும் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

பணத்துக்காக கணிப்புகளில் திருத்தம் செய்து தவறான தகவலை பரப்புவது என்பதில் சதி புகாரும் சம்பந்தப்படுகிறது. இது பற்றி உடனடியாக பரிசீலித்து உங்களது நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம் என்று இரு அமைச்சகங்களின் செயலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலர் கே. அஜய குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கின்றன என்பதை அறிய இந்தி டிவி சனல் ஒன்று தமது நிருபர்களை ரகசியமாக அனுப்பி அவற்றிடம் பேசியபோது பணம் கொடுத்தால் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கருத்துக் கணிப்பு முடிவை மாற்றி வெளியிட சிலவற்றை தவிர ஏனைய அனைத்து நிறுவனங்களும் தயாராக இருப்பது அம்பலமானது.

இதன் பின்னணியில் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புதன்கிழமை புகார் செய்தது. முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் பல கருத்துக் கணிப்பில் மோசடி செய்து வெளியிடுவது என்பது ஆட்சேபத்துக்குரியது. இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்து கிரிமினல் குற்றப் புகார் சுமத்தி தொடர்புடையவர்களை, அத்தகைய மோசடியில் ஈடுபடாத வகையில் தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இதனிடையே, புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையை வரவேற்றுள்

ளார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டப்பிரிவு மையத்தின் செயலாளர் கே.சி.மிட்டல்.

சில தனி நபர்களையும் கட்சிகளையும் முன்னணி நபர்களாக பிரபலப்படுத்தி நாட்டு மக்களை தவறாக வழி நடத்திட கருத்துக்கணிப்பு முடிவில் தில்லுமுல்லு செய்யப்படுகிறது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, எப்படி தில்லுமுல்லு நடக்கிறது என்பதை அரசின் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை அம்பலப்படுத்தும் என்றார் மிட்டல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in