

‘காவிரி கூக்குரல்’ திட்டத்தின் கீழ் இதுவரை எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது? என ‘ஈஷா’ அமைப்பின் தலைவர் சத்குருவுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஏ.வி.அமர்நாத், கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘ஈஷா’ அமைப்பின் தலைவர் சத்குரு, ‘காவிரி கூக்குரல்’ (Cauvery Calling) என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 12 ஆண்டுகளில் காவிரி ஆற்றின் கரைகளில் 253 கோடி மரங்களை நட முடிவெடுத்துள்ளார். ஒரு மரத்திற்கு ரூ.42 வழங்க வேண்டும் எனக்கூறி விவசாயிகளிடம் நிதி வசூலித்து வருகிறார். இதற்கு அர சியல் தலைவர்களும், திரைத்துறை யினரும் கூட ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.
அவர் அறிவித்துள்ளபடி கணக்கிட்டால், மொத்தமாக ரூ.10,626 கோடி வசூலிக்க முடி வெடுத்துள்ளது தெரிகிறது. இவ் வளவு பெரிய தொகையை வசூ லிப்பது தொடர்பாக அவரது ஈஷா அமைப்பும், காவிரி கூக்குரல் திட்டமும் மத்திய, மாநில அரசு களிடம் முறையான அனுமதி பெறவில்லை. எனவே, சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளை கட் டாயப்படுத்தி நிதி வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அந்த மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபேய் ஒகா, நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி அபேய் ஒகா கூறியதாவது:
காவிரி ஆற்றை பாதுகாப்பது, மரம் நடுவது குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவது நல்ல விஷயம்தான். இருந்தபோதிலும், பொதுமக்களை கட்டாயப்படுத்தி நிதி வசூலிக்கக் கூடாது. எந்த அமைப்பின் கீழ் இந்த நிதியை வசூலித்து கொண்டிருக்கிறீர்கள்?
கட்டாயப்படுத்தி நிதி வசூலிப்பதாக புகார் எழுந்தால், அதனை விசாரிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை. ஆனால், இந்த விவகாரத் தில் கர்நாடக அரசு அமைதியாக இருப்பது ஏன்? இது குறித்து கர்நாடக அரசு பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
சத்குருவின் ஈஷா அமைப்பும், காவிரி கூக்குரல் திட்டத்தின் கீழ் நிதி வசூலிப்பதற்காக உரிய அனுமதி பெறவில்லை. ஆன்மீக அமைப்பு என்றால், மத்திய - மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் நிதி வசூலிக்கலாமா?
ஆன்மீக அமைப்புகள் சட்டத் துக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டும். ஆன்மீக அமைப்புகள் சட்டத்தையும், அரசியலமைப்பை யும் மீறியவை அல்ல. காவிரி கூக்குரல் திட்டத்தில் எந்த அமைப் பின் கீழ் நிதி வசூலிக்கிறீர்கள்? இதுவரை எவ்வளவு நிதி வசூ லித்து உள்ளீர்கள்? இதுகுறித்து வரும் பிப்ரவரி 12-ம் தேதிக் குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அபேய் ஒகா உத்தரவிட்டார்.