Last Updated : 06 Jan, 2020 08:54 PM

 

Published : 06 Jan 2020 08:54 PM
Last Updated : 06 Jan 2020 08:54 PM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: மோடியா, கேஜ்ரிவாலா? - கருத்துக் கணிப்புக் கூறுவது என்ன?

டெல்லியில் பிப்ரவரி மாதம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலை முதல்வராகவும் பிரதமராக மோடியையும் டெல்லி மக்கள் விரும்புவதாக ஐஏஎன்எஸ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஜனவரி 4ம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், “டெல்லி முதல்வராக யாரை ஆதரிக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு 9 தெரிவுகளில் 69.5% பேர் நடப்பு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.

கேஜ்ரிவாலுக்கு அடுத்த முதல்வர் தெரிவாக பாஜக-வின் ஹர்ஷ் வர்தன் மிகவும் குறைவாக 10.7% ஆதரவைப் பெற்றார். காங்கிரஸின் அஜய் மாக்கன் 7.1% வாக்குகள் பெற்றார்.

ஆனால் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட சுமார் 13,706 பேர்களில் பெரும்பாலானோர், “இந்தியப் பிரதமராக சிறந்த வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்கு முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தனர். பிரதமராக மோடியை 62.4% மக்கள் விரும்புகின்றனர். ராகுல் காந்தி வெகுதொலைவில் 8.1% வாக்குகள் பெற்றார்.

ஆகவே டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலையான, ‘பிரதமருக்கு மோடி, முதல்வருக்கு கேஜ்ரிவால்’ என்ற நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்கிறது இந்த ஐ.ஏ.என்.எஸ். - சிவோட்டர் கருத்துக் கணிப்பு.

பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x