ஜேஎன்யு தாக்குதல்: மத்திய அரசு, டெல்லி போலீஸ் அலட்சியம் காட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஜேஎன்யு தாக்குதல்: மத்திய அரசு, டெல்லி போலீஸ் அலட்சியம் காட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

டெல்லி, ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் ஞாயிறன்று முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று கடும் வன்முறையில் ஈடுபட்டு மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கியது. கும்பல் வன்முறையைக் கையாள்வதில், அடக்கி ஒடுக்குவதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டியதாக மத்திய அரசு, டெல்லி போலீஸ் மீது அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை மேற்கொண்டவர் தெஹ்சீன்பூனாவாலா. இவர் தன் மனுவில், கடந்த ஜூலை 17, 2018 உத்தரவில், கும்பல் வன்முறையை அடக்குதல் கையாளுதல் ஆகியவை குறித்துத் தீர்வு வழிகாட்டுதலை அரசு மற்றும் போலீஸ் துறைக்கு மேற்கொண்டுள்ளது. இதன் படி எந்த ஒரு தனிபர் அல்லது குழு அல்லது குழுவி பகுதி கும்பலாக சட்டத்தை தங்கல் எடுத்துக் கொள்ள கூடாது என்று அரசுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதாவது மற்றவர்களை குற்றவாளிகளாக சட்டத்தைக் கையில் எடுக்கும் கும்பல் கருத முடியாது என்று கூறியுள்ளதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முகமூடி அணிந்த கும்பல் ஜேஎன்யு வளாகத்தில் நுழைந்த கும்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது, இன்னும் கூட ஒருவர் மீது கூட எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்பதை இந்த மனு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த மனுவில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மேற்கோள் காட்டிக் கூறும்போது, “எந்த ஒரு கும்பலையும் கலைந்து செல்ல போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுவது ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் கடைமையாகும், அதாவது சட்டப்பிரிவு 129-ன் படி போலீஸ் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்” என்று சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், முகமூடி அணிந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பல்கலை வளாகத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது, அவர்கள் முகமூடி ஆயுதங்கள் ஆகியவை அவர்கள் நோக்கத்தை தெளிவாக அறிவித்தும் அவர்கள் தடுக்கப்படவில்லை, டெல்லி போலீசாரால் அச்சுறுத்தப்படவில்லை, என்பதையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார் அவர்.

எனவே போலீஸார் வேண்டுமென்றேதான் நடவடிக்கை எடுக்காமல் வாளாவிருந்தனர், இதன் மூலம் கோர்ட் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அவமதித்துள்ளனர் என்று இந்த வழக்குக்கான மனு குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in