ஜே.என்.யு மாணவர்கள் சங்கம், இடதுசாரிகளே காரணம்: மும்பைக் கல்லூரிக்கு வெளியே ஏபிவிபி போராட்டம்

ஜே.என்.யு மாணவர்கள் சங்கம், இடதுசாரிகளே காரணம்: மும்பைக் கல்லூரிக்கு வெளியே ஏபிவிபி போராட்டம்
Updated on
1 min read

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஞாயிறு இரவு முகமூடி அணிந்த கும்பல் ஒன்று தடிகள் மற்றும் ராடுகளூடன் நுழைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியச் சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் திங்களன்று பல்கலை. மாணவர்கள் சங்கத்தையும் இடது சாரிகளையும் குற்றம்சாட்டி மும்பை கல்லூரி ஒன்றிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 28 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்கள் சங்கத் தலைவர் ஐஷே கோஷ் காயமடைந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.பி.வி.இ தேசியச் செயலர் அங்கிட் ஓவால் கூறும்போது, “ஞாயிறு வன்முறைக்கு இடது சாரி மற்றும் ஜே.என்.யு மாணவர்கள் சங்கமே பொறுப்பு. இந்த வன்முறையில் 23 ஏ.பி.வி.பி மாணவர்களும் காயமடைந்தனர், முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்ய வேண்டும்.

நாங்கள்தான் வன்முறைக்குக் காரணம் என்று கூறுவது இடது சாரி அமைப்புகளின் பிரச்சாரம் ஆகும், எங்கள் மீதான நன்மதிப்பைக் கெடுக்கச் செய்யும் முயற்சி.

இடது சாரிக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் டெல்லி போலீஸிடம் உள்ளது. ” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in