

தலைநகர் டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று தாக்கியது நாடு முழுதும் பலத்த எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் திரைத்துறையிலும் பலர் கண்டனக்குரல்களை எழுப்பி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு எதிராக பல டீவ்ட்களை செய்துள்ளார் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் இந்தக் கண்மூடித்தனமான முகமூடிக் கும்பல் தாக்குதலை எதிர்த்து தன் ட்விட்டர் பக்கத்தில் புரொபைல் பிக்சரை மாற்றிய விதத்தில் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.
அவர் தன் புரொபைல் படத்தில் மோடி, அமித் ஷா இருவரும் முகமூடி அணிந்து கையில் தடியை வைத்திருப்பது போன்று படத்தை மாற்றியுள்ளார்.