

பாகிஸ்தானில் நங்கனா சாஹிப் குருத்வாரா மீதான தாக்குதலின் பின்னணியில் சிறுபான்மை சீக்கிய சமூக உறுப்பினரை குறிவைத்து கொலை செய்த சம்பவத்திற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான நான்கனா சாஹிப்பில் ஆத்திரத்துடன் வந்த நூற்றுக்கணக்கான மக்கள் சீக்கிய யாத்ரீகர்களை வெள்ளிக்கிழமை கற்களால் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குருத்வாரா நான்கனா சாஹிப்பில் நடந்த காழ்ப்புணர்ச்சி மிக்க தாக்குதல் சம்பவங்களைக் இந்தியா வெள்ளிக்கிழமை கடுமையாக கண்டித்தது. அங்குள்ள சீக்கிய சமூகத்தின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அண்டை நாட்டிற்கு அழைப்பு விடுத்தது.
தற்போது குருத்வாரா மீதான தாக்குதலின் பின்னணியில் சிறுபான்மை சீக்கிய சமூக உறுப்பினர் குறிவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியா தனது கடும் கண்டனத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் புனித குருத்வாரா நான்கனா சாஹிப்பில் அப்பாவி சீக்கிய மக்களை இழிவுபடுத்தி தாக்கியுள்ளது தீர்த்துக் கொள்ளப்படாத ஒரு வழக்கு ஆகும். இது தவிர, ஒரு சீக்கிய சிறுமி ஜக்ஜித் கவுரின் கடத்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்படாத நிலையில் பெஷாவரில் சிறுபான்மை சீக்கிய சமூக உறுப்பினரைக் குறிவைத்து கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடுமையாக கண்டிக்கிறது,
குருநானக் தேவின் பிறப்பிடமான புனித நகரமான நங்கனா சாஹிப்பில் பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறைச் செயல்களுக்கு பலியாகின்றனர்.
இப்பிரச்சினையில் பாகிஸ்தான் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்திக்கொண்டு குற்றம் செய்தவர்களைக் கைதுசெய்து முன்மாதிரியான தண்டனையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கொடூரமான செயல்களில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் அரசாங்கம் கைதுசெய்து தகுந்த தண்டனையை உடனடியாக நடவடிக்கை வேண்டுமென எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை இந்தியா கேட்டுக்கொள்கிறது.
பாகிஸ்தான் அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு ஆலோசனை சொல்வதற்கு பதிலாக தங்கள் சொந்தநாட்டின் சிறுபான்மையினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.