குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலை உடைப்பு

குஜராத் மாநிலம் அம்ரேலி ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத சிலரால் காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ள காட்சி.
குஜராத் மாநிலம் அம்ரேலி ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத சிலரால் காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ள காட்சி.
Updated on
1 min read

குஜராத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்த மகாந்தி காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் துண்டுதுண்டாக உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017ல் நிறுவப்பட்ட இந்த சிலை பிரதமர் மோடி திறந்துவைத்ததாகக் கூறப்படுகிறது. சூரத்தை தளமாகக் கொண்ட வைர பரோன் சவ்ஜிபாய் தோலகியாவின் தோலகியா அறக்கட்டளை இந்த ஏரியை கட்டி உருவாக்கினர். தோலகியா அறக்கட்டளையின் முயற்சியால் எழுப்பப்பட்ட சிலை இது.

அம்ரேலி மாவட்டத்தில் ஹரி கிருஷ்ணா ஏரிக்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் அமைந்திருந்த காந்தி சிலை வெள்ளியன்று உடைக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை தேடும் முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து லாதி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஒய் பி கோஹில் கூறுகையில், ''அடையாளந் தெரியாத சில விஷமிகள் மகாத்மா காந்தி சிலையை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்திருக்கக் கூடும் என்று கருதுகிறோம்.

இது ஏரியின் கட்டுமானத்தில் விருப்பமில்லாத சிலரின் வேலை அல்லது சில சமூக விரோத சக்திகளாக இருக்கலாம். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in