

அரசியலும் மதமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா வில் நேற்று நடைபெற்ற விழா வில் சுவாமி நாராயண் பிரிவு பக்தர்களிடையே ஜே.பி. நட்டா பேசியதாவது:
சமூகத்தில் அடிக்கடி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அரசிய லுக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கப்படுகிறது. மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று நெறிமுறைகளை மதம் கற் றுக் கொடுக்கிறது. மதம் இல்லாத அரசியல் விவேகம் இல்லாததாகி விடும். மதமற்ற அரசியல் பயனற் றது. மதமும் அரசியலும் இணைந்து செயல்பட வேண்டும்.
எது நல்லது, எது கெட்டது, எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை மதம் கற்றுத்தரு கிறது. அரசியலுக்கு மதம் நிச்சயம் தேவை. பாஜக நேர்மறையாக செயல்பட்டு சமூகத்துக்கும் நாட் டுக்கும் எது நல்லதோ அதையே எப்போதும் செய்துவருகிறது. பிரதமர் மோடியை செயல்படவிடா மல் முட்டுக்கட்டை போடுவதற்காக எதிர்மறையான விஷயங்களை எதிரிகள் பரப்பும்போது, மோடி மேலும் அதிக சக்தியோடு எழுந்து நாட்டு மக்களுக்கு வளர்ச்சிப் பணி களை செய்து வருகிறார்.
ஏழைகளுக்கு மருத்துவக் காப் பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா, ஏழை பெண்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா யோஜ்னா என பல்வேறு மக்கள் நலத் திட் டங்களை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.