

ஆந்திர மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதியே அமல்படுத்தப்பட வேண்டி யது. ஆனால் ஹெல்மெட் போதிய அளவில் இருப்பு இல்லாததால், ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமைச் செயலக முதன்மை செயலாளர் ஐஒய்ஆர். கிருஷ்ணா ராவ் தலைமை யில் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் ஹைதரா பாத்தில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை இன்று முதல் அமல் படுத்தவும் மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், விபத்தில் சிக்கியவர் களுக்கு அருகில் உள்ள மருத்துவ மனைகள் இலவச சிகிச்சை அளிக்கா விடில் அவற்றின் அனுமதியை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் நிபந்தனைகளை கடை பிடிக்க முடிவு செய்யப்பட்டு, இதற் கான நடவடிக்கைகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆபத்தான சாலை வளைவுகளில் அறிவிப்பு பலகைகள் கட்டாயம் அமைக்க சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணிவதன் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு திருமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.