

குடியுரிமை சட்டம்(சிஏஏ), தேசியகுடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை குறித்து உலக நாடுகளிடம் இந்தியா விளக்கியுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிஏஏ குறித்து உலக நாடுகளிடம் இந்தியா சார்பில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்துவர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், புத்த மதத்தவர், இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு உதவவே இந்த குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உலக நாடுகளிடம் விளக்கமாக தெரிவித்துள்ளோம்.
அதைப் போலவே என்ஆர்சிகுறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சிஏஏ, என்ஆர்சி போன்றவற்றால் அரசியலமைப்புச் சட்டத்தின்அடிப்படை கட்டமைப்பு மாறாதுஎன்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ