

நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதை தடுப்பதற்காக, சிவில் வழக்குகளை தொடுப்பதற்கு முன்னதாக எதிர்த்தரப்புக்கு நோட்டீஸ் வழங்குவதை கட்டாய மாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு சுமார் 2 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் 3 கோடி வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாக மாநிலங் களவையில் கடந்த வெள்ளிக் கிழமை மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஒரு தனி நபர் மீதோ அல்லது நிறுவனம் மீதோ சிவில் சட்ட நடவடிக்கை மேற் கொள்வதற்கு முன்பு சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து சட்ட அமைச் சகத்தின் கீழ் இயங்கும் சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமியற் றல் துறை பரிசீலித்து வருகிறது.
“சிவில் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களே பேசி தீர்த்துக்கொள்ளவும், முடியாத பட்சத்தில் இறுதி வாய்ப்பாக நீதிமன்றத்தை அணுகவும் இந்த நடவடிக்கை உதவும். இதன் மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் குவி வதைத் தடுக்க முடியும்” என சட்ட அமைச்சகம் சார்பில் தயாரிக் கப்பட்டுள்ள ஆவணத்தில் கூறப் பட்டுள்ளது.
சட்ட சீர்திருத்தத்துக்கான தேசிய திட்டத்தின் ஆலோசனை கவுன்சில் கூட்டம் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக மேற்கண்ட குறிப்பு ஆவணம் தயாரிக்கப் பட்டிருந்தது.