பயணிகள் கவனத்திற்கு: ரயில்வே உதவி எண்கள் ஒருங்கிணைத்து ஒரே எண்ணாக மாற்றம்

படம் உதவி : ட்விட்டர்
படம் உதவி : ட்விட்டர்
Updated on
1 min read

ரயில் பயணத்தின் போது பயணிகள் எழுப்பும் குறைகளை விரைவாகத் தீர்க்கவும், புகார்களுக்குப் பதில் அளிக்கவும் இந்திய ரயில்வே துறையின் உதவி எண்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து 139 என்ற ஒற்றை எண்ணாக மாற்றப்பட்டுள்ளது என்ற ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு மட்டும் 182 என்ற உதவி எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த உதவி எண்ணில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

அதைத்தவிர்த்து, மற்ற அனைத்து உதவி எண்களும் நீக்கப்பட்டு, 139 என்ற புதிய உதவி எண் மட்டுமே இனிமேல் பயன்பாட்டில் இருக்கும். பயணிகள் எளிதில் நினைவில் வைக்கும் வகையில் இந்த 3 இலக்க எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

139 எனும் உதவி எண்ணில் பயணிகள் அழைத்தால் 12 மொழிகளில் ஐபிஆர்எஸ் முறை(கணினி மொழி) தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்கலாம். மொபைல் போன் மட்டுமல்லாது, எந்தவிதமான போனிலும் இருந்து இந்த உதவி எண்ணை அழைத்து பயணிகள் உதவி கோரலாம்.



பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்றவற்றுக்கு நம்பர் 1 அழுத்தினால் உடனடியாக கால்சென்டர் பிரதிநிதிகளுக்கு அழைப்பு இணைக்கப்படும்.

விசாரணைகள், பயணம் தொடர்பான கேள்விகளுக்கு 2-ம் எண்ணை அழுத்தி உதவிகள் பெறலாம்.
ரயில்வே கேட்டரிங்கில் ஏதேனும் புகார்களுக்கு 3-ம் எண்ணும், பொதுவான புகார்களுக்கு 4-ம் எண்ணையும் அழுத்தித் தெரிவிக்கலாம்.

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 5-ம் எண்ணை அழுத்தி தகவல் தெரிவிக்கலாம், விபத்துகள் தொடர்பான உதவிக்கு 6-ம் எண்ணையும், வழங்கப்பட்ட புகார்களின் நிலைமை குறித்து அறிய 9 எண்ணையும் அழுத்தலாம், கால்சென்டர் பிரதிநிதிகளிடம் பேசுவதற்கு ஸ்டார் பட்டனை அழுத்தி பயணிகள் பேசலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in