பெலகாவியில் ஓர் அங்குல நிலம் கூட விட்டுத்தர முடியாது- உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா பதில்

பெலகாவியில் ஓர் அங்குல நிலம் கூட விட்டுத்தர முடியாது- உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா பதில்
Updated on
1 min read

கர்நாடக - மகாராஷ்டிர எல்லையில் உள்ள பெலகாவி தொடர்பாக இரு மாநிலத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இங்கு மராட்டியர்கள் அதிகம் வசிப்பதால் கர்நாடக ராஜ்யோத்சவா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு எழுகிறது. சிவசேனா, ஏகி கிரன் அமைப்பினர் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பெலகாவி மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது என கூறினார். இதற்கு எதிராக கர்நாடக அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெலகாவியில் கடைகளில் எழுதப்பட்டுள்ள மராட்டிய எழுத்துகளை தார் பூசி அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், “அரசியல் ஆதாயத்திற்காக பெலகாவி விவகாரத்தை உத்தவ் தாக்கரே மீண்டும் கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

பெலகாவி பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து வல்லுநர் குழுக்களும் அது கர்நாடகாவுக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளன. எனவே பெலகாவி எல்லைப் பிரச்சினை முடிந்துபோன விவகாரம். கர்நாடகாவின் நிலம், நீர், மொழி ஆகியவற்றில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. எக்காரணம் கொண்டும் பெலகாவி மாவட்டத்தின் ஓர் அங்குலம் நிலம் கூட விட்டுத்தர மாட்டோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in