Published : 14 Aug 2015 06:29 AM
Last Updated : 14 Aug 2015 06:29 AM

பெங்களூருவில் லாக்கப் மரணங்களை தடுக்க காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்பு

பெங்களூருவில் அதிகரித்துவரும் லாக்கப் குற்றங்கள் மற்றும் மரணங்களை தடுக்கும் வகை யில் பெங்களூருவில் 42 காவல் நிலையங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களுக்கும் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுபவர்களுக்கும் விசா ரணை கைதிகளுக்கும் போலீஸா ரால் அநீதி இழைக்கப்படுகிறது. இதனை தடுக்க காவல் நிலை யங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம், காவல் நிலையங்களில் மனித உரிமையை நிலைநாட்டும் விதமாக சிசிடிவி கேமரா பொருத்த வேண் டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து பெங்களூருவில் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. இது தொடர்பாக பெங்களூரு மாநகர இணை ஆணையர் ஹரிசேகரன் `தி இந்து' விடம் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூருவில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர், காவலர்கள் விதிமுறைகளை மீறுவதாக புகார் இருந்து வந்தது. இந்நிலையில் உச்ச‌ நீதிமன்றமும் காவல் நிலையங்களைக் கண் காணிக்க, `சிசிடிவி கேமரா' பொருத்த‌ வேண்டும் என உத்தர விட்டுள்ளது. எனவே பெங்களூரு வில் முதல்கட்டமாக 42 காவல் நிலையங்களில் தலா 3 கேமராக் கள் வீதம் 126 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காவல் நிலையத்தில் பொருத் தப்பட்டுள்ள கேமராக்களில் 24 மணி நேரமும் பதிவாகும் காட்சி களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவாறு சிறப்பு பிரிவு போலீஸார் கண் காணிப்பார்கள். இதில் ஆட்சேபத் துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை யருக்கு பரிந்துரை செய்வார்கள்” என்றார்.

கண்காணிப்பது யார்?

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் காவ்யா பிரகாஷ், `தி இந்து'விடம் பேசும்போது, “நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பது, மகிழ்ச்சியான அம்சம்தான். இந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கண்காணிப்பது குறித்து போலீஸா ரிடம் தெளிவான திட்டம் இல்லை.இந்த பதிவுகளை போலீஸாரே கண்காணித்தால், உண்மை வெளிச்சத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு தான் கண்காணிக்க வேண்டும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x