

2002, குஜராத் கலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு நற்சான்று வழங்குவதில் அவசரம் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
குஜராத் கலவரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் நீதிமன்றமும் நரேந்திர மோடிக்கு நற்சான்று வழங்கியி ருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவது பற்றி கேட்கிறீர்கள்.
குஜராத் கலவரத்துக்கு மாநில முதல்வர் என்ற முறையில் நரேந்திர மோடி தார்மிக ரீதியில் பதில் சொல்ல கடமைப்பட்டவர். மேலும் அரசு இயந்திரம் செயலிழந்ததற்கு அவர் சட்டப்படியும் பொறுப் பேற்கவேண்டியவர் ஆகிறார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் பல குறைபாடுகளை பல்வேறு நிபுணர்கள் சுட்டிக் காட்டியது உங்களுக்குத் தெரியும். சிறப்பு புலனாய்வுக் குழு செயல் பாடுகளிலும் குறைகள் சொல்லப் பட்டன. சிறப்பு புலனாய்வு குழு வின் அறிக்கையை கீழமை நீதி மன்றம் ஏற்றுக்கொண்டாலும், உயர் நீதிமன்றங்கள் அதை இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
கலவரத்தை கட்டுப்படுத்த மோடி எந்த அளவுக்கு பொறுப் புடன் நடந்துகொண்டார் என்பது போதுமான அளவில் விசாரிக்கப்பட வில்லை. இந்த நேரத்தில் மோடிக்கு நற்சான்று வழங்குவதில் அவசரம் கூடாது. இந்த விவகாரத்தில் பதில் அளிக்கப்படாத கேள்விகள் பல உள்ளன. நாடு நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆம் ஆத்மி ஒரு பொருட்டல்ல…
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் நாங் கள் ஒரு பொருட்டாக கருத வில்லை. டெல்லியில் ஆட்சி நடத்த அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. டெல்லி தேர்தலுக்கு முன் எந்தெந்தப் பிரச்சினைகளை அவர்கள் எழுப் பினார்களோ, ஆட்சி அமைத்த வுடன் அந்தப் பிரச்சினைகளை அவர்கள் தீர்க்கவில்லை. டெல்லி ஆம் ஆத்மி அரசின் சாதனை என்று சொல்வதற்கு எதுவுமில்லை
சரியான பெண் கிடைத்ததும் திருமணம்
எனது திருமணம் பற்றிய கேள்வி அடிக்கடி எழுகிறது. தற்போது நான் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளேன். துரதிருஷ்டவசமாக எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை. சரியான பெண்ணை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.