

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சி வன்முறையைத் தூண்டிவருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச அரசு அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்களின் போது போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதில் போராட்டக்காரர்களாக எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் ஈடுபட்டதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டதாக புகார் தெரிவித்துள்ள யோகி அரசு அந்த அமைப்பை தடை செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் (எம்.எச்.ஏ) கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும் உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்ளிட்ட பிற மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்தும் சில ஆதாரங்களை பெற வாய்ப்புள்ளது என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் ஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், ''உத்தரபிரதேச டிஜிபி ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், 23 வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த 23 பிஎஃப்ஐ செயற்பாட்டாளர்களை மாநில காவல்துறை கைது செய்துள்ளது, போராட்டத்தின்போது வன்முறைக்கு தூண்டியது யார் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. கைது செய்யப்பட்ட பி.எஃப்.ஐ உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிடமுடியாது'' என்றார்.
மேலும் துணை முதல்வர் கேசவ் மவுரியா செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இது சர்ச்சைக்குரிய அமைப்பைத் தடை செய்வதற்கான செயல்முறையின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பி.எஃப்.ஐ.க்கு தடை விதிக்க மாநில அரசு கடுமையாக ஆதரவளிக்கிறது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு 2001 இல் தடைசெய்யப்பட்ட, இந்திய இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) ஒரு 'மறுசுழற்சி' யாக தோன்றிய அமைப்புதான் இது.
பல சிமி செயற்பாட்டாளர்கள் இப்போது பி.எஃப்.ஐ.யில் உள்ளனர், மேலும் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டி வருகின்றனர். அண்மையில் நடந்த போராட்டங்களின் போது அவர்களது உறுப்பினர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் பி.எஃப்.ஐ செயல்பட்டு வருகிறது.''
இவ்வாறு துணை துணை முதல்வர் கேசவ் மவுரியா தெரிவித்தார்.