Published : 01 Jan 2020 03:13 PM
Last Updated : 01 Jan 2020 03:13 PM

போலீஸுக்குப் போலீஸ் யார்? 38 ஆண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி

குடியுரிமைத் திருத்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போலீஸ் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, ஏகப்பட்ட பேரை கைது செய்தது, குறிப்பாக உ.பி.யில் 66 வயது முஸ்லிம் பெரியவரை காவலில் வைத்து துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றம் 38 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பிய கேள்வியை தற்போது பிரதானப்படுத்துவதாக உள்ளது. அந்தக் கேள்விதான் இது: “போலீஸுக்குப் போலீஸ் யார்?”

போலீஸ் காவலில் ஒருவருக்கு நிகழ்த்தப்படும் வன்முறை என்பதற்கு ‘சந்தேகங்களற்ற நிரூபணம் தேவை’ என்று நீதிமன்றங்கள் தெரிவிப்பது உண்மையான எதார்த்தங்களையும், உண்மையான சூழ்நிலைகளையும் புறக்கணிக்கிறது, இதனால் நீதித்துறை மீதே ஐயம் எழும் சூழ்நிலை உருவாகியுள்ளத என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே நீதிமன்றங்கள் ‘எதார்த்த நிலைமைகளைப் புறக்கணிக்கும்’ போக்கு லாக்-அப்பில் எப்போதாவது கைதி மரணமடைந்தால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று போலீஸுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி விடகூடியது, என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி 1981ம் ஆண்டு பிரேம்சந்த்-இந்திய அரசு வழக்கு ஒன்றில் “போலீஸுக்கு போலீஸ் யார்?” என்ற கேள்வியை எழுப்பியது.

“இழிவான நடைமுறை”

38 ஆண்டுகள் பழைய வழக்கில் நீதிமன்றம் மேலும் கடுமையாகச் சாடிய போது, “காவலில் இருக்கும் தனி மனிதர் தனிமையில், உதவியின்றி தவிப்பவர், இப்படிப்பட்ட நிலையில் அவர் மீது பலப்பிரயோகம் முழுதும் சட்ட விரோதமானது, மிகவும் கீழ்த்தரமானது, இழிவானது. எனவே இத்தகைய செயலை கடுமையாக கண்டிக்க வேண்டும், நாங்கள் அதைத்தான் செய்கிறோம்” என்றது உச்ச நீதிமன்றம்.

அதே போல் டி.கே. பாசு வழக்கில் நீதிமன்றம் கூறும்போது, காவலில் இருக்கும் கைதி மீதான பலப்பிரயோகம், சித்ரவதை, லாக்-அப் மரணம் ஆகியவை சட்டத்தின் ஆட்சியின் மீது விழும் அடியாகும் என்று இந்த வழக்கில் கூறிய உச்ச நீதிமன்றம், "கைது நடவடிக்கைகளுக்காகச் செல்லும் போலீஸ் அதிகாரி, தன் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நன்றாக தெரியக்கூடிய , தெளிவான அடையாளங்களை பேட்ஜ் ஆக அணிந்திருப்பது அவசியம்” என்று வலியுறுத்தியது.

அதே போல் பிரகாஷ் சிங் வழக்கில் போலீஸார் சட்டத்தை அமல்படுத்துவதோடு குடிமக்களின் உரிமைகளை தன்னாட்சியுடனும், பொறுப்புடனும் திறமையுடனும் பாதுகாக்க வேண்டும் என்பதை அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x