

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிரும் பனி மூட்டமும் நிலவுகிறது. கடும் குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர். காலை 9 மணிக்கு மேலும் சாலைகளில் பனி போர்வை போர்த்தப்பட்டது போல காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்களும் ஏற்படுகின்றன. நேற்று முன்தினம் உ.பி.யில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த கார், பனி மூட்டம் காரணமாக கால்வாயில் விழுந்ததில் 6 பேர் இறந்தனர்.
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை 2.6 டிகிரியாகவும் அதிகபட்ச வெப்ப நிலை 9.4 டிகிரியாகவும் இருந்தது. 1901-ம் ஆண்டில் இருந்து கடந்த திங்கட்கிழமைதான் டெல்லியில் டிசம்பர் மாதத்தில் மிகவும் குளிர்ச்சியான நாள் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
பனி மூட்டம் டெல்லியில் நேற்றும் கடுமையாக இருந்ததால் விமானம், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்திரா காந்திசர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 450 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 21விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 40 விமானங் கள் ரத்து செய்யப்பட்டன. 50க்கும் மேற்பட்ட ரயில்களில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்ட தாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.