Last Updated : 30 Dec, 2019 12:48 PM

 

Published : 30 Dec 2019 12:48 PM
Last Updated : 30 Dec 2019 12:48 PM

இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் சில எழுத்தாளர்கள்: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

ஒருசில எழுத்தாளர்கள் இலக்கியங்களை வெவ்வேறு முகாம்களாகப் பிரித்து வைத்துக்கொண்டு இளைஞர்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றனர் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

லக்னோவில் 43-வது இந்தி சம்மன் விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உத்தரப் பிரதேச இந்தி சன்ஸ்தானின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

விழாவில் பல எழுத்தாளர்களை அவர் கவுரவித்துப் பாராட்டினார். அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக வாழ்த்தினார்.

இந்தி சம்மன் விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

''நமது இலக்கியங்கள் தற்போது வெவ்வேறு முகாம்களாகப் பிரிந்து கிடக்கின்றன. சில எழுத்தாளர்கள் நம் இலக்கியங்களை தனித்தனியாகப் பிரிக்க முயல்கின்றனர். அதற்கென்று தனித்தனியே முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு இளைஞர்களை அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். இத்தகைய எழுத்தாளர்கள் இளைஞர்களைக் குழப்பவும் முயல்கிறார்கள். அத்தகைய நிலைமை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அனைத்து எழுத்தாளர்களின் பொறுப்பாகும்.

இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. இலக்கியத்தில் பொது நலன் குறித்த உணர்வு இருக்க வேண்டும். நாம் எங்கு பேனாவைக் கட்டிப்போட முயன்றாலும் சமூகம் குழப்பமடையும். சமுதாயத்தை வழிநடத்துதல் ஒவ்வொரு நபரின் பொறுப்பாகும். இது கல்வியறிவாளர்களுக்கு ஒரு பெரிய சவால். ஏனெனில் சில சமயங்களில் எழுத்தாளர்கள் இலக்கியத்தைக் குழப்புவதன் மூலம் சமூகத்தைக் குழப்ப முயல்கிறார்கள்''.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x