

தனது தோல்விக்கு காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களே காரணம்' என தேர்தலில் தோல்விய டைந்த நடிகை ரம்யா காங்கிரஸ் மேலிடத்திற்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியின் மாண்டியா தலைவர்கள், 'காங்கி ரஸின் தோல்விக்கு ரம்யாவே காரணம்' என சரமாரி புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நடிகை ரம்யா மாண்டியாவில் மகத்தான வெற்றி பெற்றதால், காங்கிரஸ் மேலிடம் மக்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கியது. இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்ட ராஜூவிடம் 5,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்த ரம்யா, தனது தோல்விக்கான காரணத்தை விளக்கி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக் கும், டெல்லி தலைமைக்கும் புதன் கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "மண்டியாவில் நான் மீண்டும் களமிறங்கியது அங்கிருக்கும் சில முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் எனக்கு உதவியாக அவர்கள் தேர்தல் பணியாற்ற வில்லை. இதுதொடர்பாக தேர்தல் நேரத்திலே ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தேன். இருப்பினும் அவர்கள் எனக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டனர். இதனாலே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளளார்.
மேலும் ரம்யா அக்கடிதத்தில், "என்னுடைய அரசியல் வளர்ச்சியை விரும்பாத நடிகர் அம்பரீஷ், இம்முறை எனக்காக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அதேபோல மாண்டியாவின் முக்கிய தலைவர்களான மாதே கவுடா, சத்யானந்தா ஆகியோர் என்னை தோற்கடிப்பதற்காக மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் புட்டராஜூவுடன் கைகோர்த்து செயல்பட்டனர்" என கூறியுள்ளார்.
ரம்யா மீது புகார்
இதனைத்தொடர்ந்து புதன் கிழமை மாண்டியாவில் காங் கிரஸ் தலைவர்களான மாதே கவுடா, சத்யானந்தா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருக்கிறோம். எங்கள் மீது யாரும் இத்தகைய புகாரை தெரிவித்ததில்லை. தொகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சித் தலைமை ரம்யாவை நிறுத்திய போதும், அவருக்கு ஆதரவாகவே செயல் பட்டுள்ளோம்.
ஆனால் ரம்யா எங்களை யும், இளைஞர் காங்கிரஸாரை யும் முழுவதுமாக புறக்கணித்து விட்டார். காங்கிரஸ் கோட்டையான மாண்டியாவில் காங்கிரஸ் தோற்றதற்கு ரம்யாவே காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் புகார் கடிதம் அனுப்ப இருக்கிறோம்" என்றனர்.