Last Updated : 30 Dec, 2019 11:48 AM

 

Published : 30 Dec 2019 11:48 AM
Last Updated : 30 Dec 2019 11:48 AM

கோவாவில் புத்தாண்டு கொண்டாடும் அயர்லாந்து பிரதமர்

கோவாவில் புத்தாண்டு கொண்டாட வந்து அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர்.

பனாஜி

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அயர்லாந்து பிரதமர் வராத்கர் வரும் புத்தாண்டு தினத்தை கோவாவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். இது முற்றிலும் அவரது தனிப்பட்ட முறையிலான இந்தியப் பயணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவாவைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''2017 ஜூன் மாதம் முதல் அயர்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்து வரும் லியோ வராத்கர் தற்போது இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். வராத்கர் இந்தியாவில் உள்ள தனது வேர்களைத் தேடி வந்துள்ளார். இது முற்றிலும் அவரது தனிப்பட்ட முறையிலான இந்தியப் பயணமாகும்.

ஞாயிற்றுக்கிழமை, வராத்கர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மகாராஷ்டிராவின் கடலோர சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமமான வராத்தைப் பார்வையிட்டார்.

அவரது தந்தை அசோக் வராத்கர், ஒரு மருத்துவர். 1960 களில் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வராத்தில் ஒன்றாக கூடுவது வழக்கம். இந்த ஆண்டும் அவர்கள் அனைவரும் வராத் கிராமத்தில் ஒன்றாகச் சந்தித்தனர்.

அப்போது அயர்லாந்து பிரதமர் அங்குள்ள வராத் கிராம தெய்வத்தின் கோயிலையும் பார்வையிட்டார். இந்தப் பயணம் ஒரு சிறப்பான தருணம் என்று அயர்லாந்து பிரதமர் கூறினார். அவரை கிராமவாசிகள் வாழ்த்தினர். புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வராத்கர் இன்று பிற்பகல் கோவாவுக்கு வருகிறார்.

அவரது வருகையின்போது அதிகாரபூர்வ செயல்பாடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் ஜனவரி 1 வரை கோவாவில் இருப்பார்''.

இவ்வாறு கோவா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x