Last Updated : 06 Aug, 2015 08:54 AM

 

Published : 06 Aug 2015 08:54 AM
Last Updated : 06 Aug 2015 08:54 AM

முதல்முறையாக அமெரிக்காவின் 9 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ: ஒப்பந்தம் கையெழுத்தானது

பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண் ணில் செலுத்திய இஸ்ரோ, முதல் முறையாக‌ அமெரிக்காவின் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற் கைக்கோள்களை விண்ணில் ஏவு கிறது. இது தொடர்பான ஒப்பந்தத் தில் இஸ்ரோவின் வர்த்தக பிரி வான ஆன்ட்ரிக்ஸ் கையெழுத்திட் டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோவின் செய்தி தொடர்பாளர் தேவி பிரசாத் கார்னிக் கூறியதாவது:

சர்வதேச அளவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண் ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. இதனால் பல வெளிநாடுகள் தங்களது செயற் கைக்கோள்களை இஸ்ரோவின் மூலம் செலுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 45 செயற்கைக் கோள்களை இஸ்ரோ வெற்றிகர மாக‌ விண்ணில் ஏவியுள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தின் 5 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி - சி28 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக‌ விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில் இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் அமெரிக்காவின் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள் களை விண்ணில் ஏவுவதற் கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது.

இந்த சிறிய ரக செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும்.பெரிய செயற்கைக்கோள்களை செலுத்தும் போது, இத்தகைய நானோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்கள் கூடுதலாக இணைத்து அனுப்புவது எளிதாக இருக்கும்.

இதுமட்டும் அல்லாமல் நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட் சோதனை முயற்சி நடத்தப்பட இருப்பதாக திருவனந்த புர‌த்தில் உள்ள விக்ரம் சாரா பாய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.சிவன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இத்தகைய சோதனைகள், செயற்கைக்கோள் களை ஏவும் அதிநவீன வாகனங் களை வடிவமைப்பதற்கு பெரிதும் உதவும்.

ரூ.250 கோடி செலவில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட ஜி.எஸ்.எல்.வி -டி -6 ராக்கெட் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஜிசாட் 6 விண்ணில் ஏவுவதன் மூலம் இந்திய தகவல் தொடர்பு துறை அடுத்த கட்டத்துக்கு செல்லும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x