Last Updated : 16 Aug, 2015 11:02 AM

 

Published : 16 Aug 2015 11:02 AM
Last Updated : 16 Aug 2015 11:02 AM

பெங்களூருவில் முதல்வர் வாகனம் செல்வதற்காக 20 நிமிடங்கள் காத்திருந்த 3 ஆம்புலன்ஸ்: பேஸ்புக்கில் போக்குவரத்து காவலரின் ஆவேசப் பதிவு

பெங்களூருவில் க‌ர்நாடக முதல் வர் சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்காக, 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 20 நிமி டங்கள் சாலையில் காத்திருந்ததாக போக்குவரத்து ஊழியர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பெங்களூ ருவை சேர்ந்த டிராபிக் வார்டன் சத்தியநாராயணா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கடந்த 9-ம் தேதி கர்நாடக முதல் வர் சித்தராமையா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடை பெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றார். இதனால் மேக்ரி சர்க்கிள் பகுதியில் முதல் வரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்காக, மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சுமார் 20 நிமிடங் கள் அனைத்து வாகனங்களும் நிறுத்தியதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய 3 ஆம்புலன்ஸுகளும் இதில் நிறுத் தப்பட்டன. ஆம்புலன்ஸின் சைரன் தொடர்ந்து அலறிக் கொண்டே இருந்தது. இதையடுத்து நான் ஓடிப் போய் அங்கிருந்த போக்கு வரத்து போலீஸாரிடம் ஆம்புலன் ஸுக்கு வழிவிடுமாறு கூறினேன்.

உடனே போக்குவரத்து போலீஸார் சித்தராமையாவின் பாதுகாவலர்களிடம் பேசினர். அதற்கு, '5 நிமிடங்கள் காத்திருங் கள்' என கூறினர். இதனால் நான் போக்குவரத்து போலீஸாரிடமும், பாதுகாப்பு அதிகாரிகளிடமும், 'ஓர் உயிரின் மதிப்பு தெரியுமா?' என வாதிட்டேன். முதல்வரின் வாகனம் செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்த, நோயாளிகள் என்ன ஆனார்களோ?'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தியநாராயணாவின் இந்த பதிவை வாசித்த பெங்களூரு வாசிகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் இருந்து பலரும் தங்களின் ஆத்திரத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். பலர் இந்த பதிவை தங்களது பக்கத்தில் பகிர்ந்து, "நாடு முழுவதும் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கத்தினரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் சாமான்யர்களின் உயிருக்கு இருப்பதில்லை. இந்த சம்பவத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, நீதி வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு அதிகாரிகள் முழுவதுமாக மறுத்துள்ளனர். பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்காக ஆங்காங்கே 5 நிமிடங்கள் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். பெங்களூரு போக்குவரத்து போலீஸார், "முதல்வரின் வாகனம் சென்றால் கூட, ஆம்புலன்ஸ் சாலையை கடக்க சட்டத்தில் இடம் இருக்கிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x