Published : 29 Dec 2019 08:24 AM
Last Updated : 29 Dec 2019 08:24 AM

உ.பி. போலீஸ் தன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதாக பிரியங்கா காந்தி புகார்

உ.பி.மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சென்ற போது உ.பி. மகளிர் போலீஸ் அதிகாரி தன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு கீழே தள்ளியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா குற்றச்சாட்டு எழுப்பினார்.

சிறையில் அடைக்கப்பட்ட சமூகச் செயல்பாட்டாளரும் கட்சி உறுப்பினருமான ஒருவரை பிரியங்கா காந்தி சந்திக்கச் சென்றபோது தன் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உ.பி.யில் கடும் போராட்டங்கள் எழுந்தன, இதனையடுத்து போலீஸ் நடவடிக்கைகளில் சுமார் 22 பேர் பலியாகியுள்ளனர், ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றார் அப்போதுதான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார், ஆனாலும் ஓய்வு பெற்ற எஸ்.பி. மற்றும் அம்பேத்கர் இயக்க செயல்பாட்டாளருமான எஸ்.ஆர். தாராபுரி என்பவர் குடும்பத்தினரை எப்படியோ பிரியங்கா சந்தித்தார். இவர் டிச.20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முதலில் காரில் சென்ற பிரியங்காவை போலீசார் மடக்கியுள்ளனர், இதனையடுத்து காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றா, பிறகு கட்சித் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றார்.

தன் காரை வழிமறித்து போலீஸார் தன்னிடம் கேட்டதை விவரித்த பிரியங்கா, “நான் அங்கு போக முடியாது என்றனர், நான் ஏன் என்று கேட்டேன், நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்றனர். சரி நான் நடந்து செல்கிறேன் என்று நடக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னைச் சூழ்ந்து என் கழுத்தைப் பிடித்துத் தள்ளினர். என்னைப் பிடித்துத் தள்ளியதில் நான் கீழே விழுந்தேன்” என்றார்.

மேலும மத்திய ரிசர்வ் போலீஸ் துறைக்கு தான் எழுதிய புகாரில் பிரியங்கா காந்தி, “மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து அத்து மீறி நுழைந்து என் பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டி நான் எங்கெங்கெல்லாம் செல்லவிருக்கிறேன் என்று விவரங்களைக் கேட்டனர்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x