Last Updated : 28 Dec, 2019 04:45 PM

 

Published : 28 Dec 2019 04:45 PM
Last Updated : 28 Dec 2019 04:45 PM

சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும்: உ.பி.முதல்வரிடம் ஷியா பிரிவு மதகுரு கோரிக்கை

ஷியா பிரிவைச் சேர்ந்த மதகுரு கல்பே ஜாவத் | கோப்புப் படம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான ’போலி வழக்குகளில்’ கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, ஷியா மதகுரு கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் புலந்தசாஹர் மாவட்டத்தில் உள்ள உபர்கோட் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மக்கள் கடந்த 20-ம் தேதி போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அரசு வாகனங்கள், ஜீப்கள், கார்கள், பேருந்துகள் ஆகியவற்றின் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர் தீவைத்தும் எரிக்கப்பட்டன.

இந்த வன்முறை தொடர்பாக புலந்த்சாஹர் போலீஸாரால் 22 அடையாளம் தெரிந்தவர்கள் மீதும், 800 அடையாளம் தெரியாதவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை செய்ய வேண்டுமென லக்னோவில் இன்று (சனிக்கிழமை) ஷியா பிரிவைச் சேர்ந்த மதகுரு கல்பே ஜாவத் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து மதகுரு கல்பே ஜாவத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்தபோது சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு எழுந்த மோசமான நிலைமையைக் கட்டுப்படுத்தியதற்காக லக்னோ காவல்துறையைப் பாராட்டு தெரிவித்தேன், வன்முறையைத் தூண்டிய சமூக விரோத சக்திகள் மீதும் நடவடிக்கை காவல்துறை எடுக்கப்பட வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். அப்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்திற்கு முன்நிறுத்தப்படுவார்கள் என்று முதல்வர் என்னிடம் உறுதியளித்தார்.

ஆனால் உ.பி. காவல்துறை அப்பாவி மக்களை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பது கவலை அளிக்கிறது என்றும் அவரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான "போலி" வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வேண்டுமென முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும், முசாபர்நகரில் ஷியா மதர்சாவிலிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்துள்ளேன்.

இவ்வாறு ஷியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x