மே மாதத்தில் குளிரும் டெல்லி

மே மாதத்தில் குளிரும் டெல்லி

Published on

மே மாதம் என்றால் வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் வெயில் நன்றாக காயும். ஆனால் நேற்று டெல்லியில் அதிகலை வெப்ப நிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையும் சகஜ நிலையை விடவும் 9 டிகிரி செல்சியஸ் குறைந்து 30.6 டிகிரி செல்சியசாக நேற்று இருந்தது.

திங்கள் காலை 8.30 மணி முதல் செவ்வாய் காலை வரை 9.7 மிமீ மழை பெய்துள்ளது. அரேபியக் கடலின் மேல் உருவாகியுள்ள ஈரப்பதமே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் பொதுவாக அதிகபட்ச சராசரி வெப்பநிலை டெல்லியில் 41 டிகிரி செல்சியசாக இருக்கும். குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 26 டிகிரியாக இருக்கும்.

இன்றும் டெல்லியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in