இந்தியா
‘இந்திய தாயிடம் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்’- ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதமர் இந்திய தாயிடம் பொய் சொல்கிறார்” என ‘பொய், பொய், பொய்’ என்ற ஹேஷ்டேக்குடன் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசும் வீடியோவை இணைத்துள்ளார். அதில், “முஸ்லிம்கள் தடுப்புக் காவல் மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் வதந்தியை பரப்புகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். மேலும் அசாமில் தடுப்புக் காவல் மையம் கட்டுவது போன்ற வீடியோவும் அதில் இடம்பெற்றுள்ளது.- பிடிஐ
