Published : 26 Dec 2019 09:02 PM
Last Updated : 26 Dec 2019 09:02 PM

பிரதமர் மோடியின் போராட்டமும் தவறா? - பிபின் ராவத்துக்கு ஒவைசி கேள்வி

பிரதமர் மோடி மாணவனாக இருந்தபோது நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதாக கூறினாரே அதுவும் தவறா என ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்த நேரடியாக குறிப்பிடாமல் பேசினார். அவர் கூறியதாவது:

‘‘தலைவர் என்பது வெறும் தலைமை ஏற்பது மட்டுமல்ல. நீங்கள் முன்னே செல்லும் போது, மற்றவர்கள் தங்களை பின் தொடர்வார்கள் என்ற எண்ணம் வேண்டும். இது சாதாரமானது அல்ல.

மிகவும் எளிமையான விஷயம் போல தோன்றும். ஆனால், இது மிகவும் சிக்கலான விஷயம். உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தவறாக வழி நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இதன் மூலம் நமது நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் நடந்ததையும் பார்த்தோம். இது தலைமைத்துவம் அல்ல’’ எனக் கூறினார்.

இதுகுறித்து அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:
‘‘ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பேச்சு கண்டனத்துக்குரியது. மோடி அரசின் செயல்பாடுகளையே அவரது பேச்சு எதிரொலிக்கிறது. நெருக்கடி நிலை காலத்தின் தான் போராட்டத்தில் பங்கேற்றது பற்றி பிரதமர் மோடி கூறியிருந்தார். பிபின் ராவத்தின் பேச்சைபடி அதுவும் கூட தவறானது தான்’’ என ஒவைசி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x