Last Updated : 26 Dec, 2019 03:44 PM

 

Published : 26 Dec 2019 03:44 PM
Last Updated : 26 Dec 2019 03:44 PM

இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை: என்ஆர்சியை நடைமுறைப்படுத்த உ.பி. மத்திய ஷியா வஃக்பு வாரியம் ஆதரவு

குடியுரிமைச் சட்டத்துக்கும், என்ஆர்சிக்கும் எதிராக முஸ்லிம்கள் போரடி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷியா மத்திய வஃக்பு வாரியம் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, 16 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், " என்ஆர்சி குறித்து எந்தவிதமான விவாதங்களும் நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையில் நடைபெறவில்லை. இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது" என விளக்கம் அளித்தார்.

இந்தசூழலில், தேசியக் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு ஆதரவு அளிப்பதாக உத்தரப்பிரதேச ஷியா மத்திய வஃக்பு போர்டு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷியா மத்திய வஃக்பு போர்டு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வி நிருபர்களிடம் கூறுகையில், " என்ஆர்சி நடைமுறையால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. என்ஆர்சி இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். என்ஆர்சியின் முக்கிய நோக்கமே இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களைக் கண்டுபிடிக்கவும், நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களைக் கண்டுபிடிக்கவும்தான்.

திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சிகளுக்கு ஊடுருவல் காரர்கள் என்பவர்கள் வாக்கு வங்கியாகக் காணப்படுகிறார்கள். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானி்ஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஊடுருவியுள்ளவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. நாட்டில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்மையான முகம் வெளியே தெரிந்துவிடும்.

மற்ற நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக மதிரீதியாக கொடுமைகளும், துன்பங்களும் நிகழ்த்தப்படுவதால்தான் அவர்கள் இந்தியாவுக்குள் அடைக்கலமாக வருகிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் சுயநல நோக்கத்துக்காகவும், இந்தியாவுக்குச் சேதத்தை உண்டாக்கும் நோக்கிலும் வருகின்றனர் " எனத்தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x