

நாடு முழுவதும் 69-வது சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
மின்சார வசதி இல்லாமல் இன்னும் 18500 கிராமங்கள் உள்ளன. அவற்றுக்கு அடுத்த 1000 நாள்களில் மின்இணைப்பு வழங்கப்படும்.
பயன்பாட்டில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை மக்களுக்கு உதவும்பொருட்டு எளிமைப்படுத்திட 4 தொகுப்புகளுக்குள் கொண்டு வரப்படும். வேளாண் அமைச்சக மானது இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என்ற புதுப்பெயருடன் செயல்படும்.
இளைஞர்களின் தொழில் முனைவு திறனை ஊக்கவிக்க ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’கொள்கை திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும்.ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. மற்ற நடைமுறைகள் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கப்டும்.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் பலனாக புதியாக 17 கோடி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் ஒத்துழைப்பால் எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேறியுள்ளது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஐ விசாரிக்கும் ஊழல் வழக்குகள் எண்ணிக்கை 1800 ஆக அதிகரிததுள்ளது. முந்தைய ஆட்சியில் இது 800 ஆக இருந்தது.
1.25 லட்சம் வங்கி கிளைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு தலித் அல்லது ஆதிவாசி பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்.
மாநிலங்களின் ஒத்துழைப்பால் எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேறியுள்ளது.