Last Updated : 26 Dec, 2019 11:07 AM

 

Published : 26 Dec 2019 11:07 AM
Last Updated : 26 Dec 2019 11:07 AM

‘சர்னா’ என்றால் என்ன? - ஜார்கண்டில் தனி மதம் கோரும் பழங்குடியினர்

2013ம் ஆண்டு சர்னா பழங்குடியினர் புகைப்படம். | கோப்புப் படம்:மனோப் சவுத்ரி. செய்திக்கான பிரதிநிதித்துப் படம் (representative image)

புதுடெல்லி

சர்னா என்பது இயற்கை வழிபாட்டையொட்டிய ஒர் மதம் ஆகும். இந்த மதத்தை ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பின்பற்றி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய அரசில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா தனது தேர்தல் அறிக்கையில் சர்னாவை மதமாக அங்கீகரிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆகவே புதிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு இந்த சர்னாவை புதிய மதமாக அங்கீகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“நீண்ட காலமாகவே சர்னாவை தனி மதமாக அங்கீகரிக்கக் கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. சர்னா நடைமுறையைப் பின்பற்றுபவர்கள் இயற்கை வழிபாட்டாளர்கள் . ஜார்கண்டில் மொத்தம் 32 பழங்குடியினர் பிரிவுகள் உள்ளன. இதில் 8 பழங்குடியினர் பலவீனமான பழங்குடிப் பிரிவினர் ஆவார்கள். இந்தப் பழங்குடியினர் பிரிவுகள் இந்துக்கள் ஆவார்கள், சிலர் மட்டுமே கிறித்துவ மதத்துக்கு மாறியுள்ளனர்” என்று ஹஜாரிபாக் பல்கலைக் கழக மானிடவியல் பேராசிரியர் ஜி.என்.ஜா தெரிவிக்கிறார்.

சர்னாவை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் காரணம் பழங்குடியினர் தங்கள் மத அடையாளத்தை பாதுகாக்க விரும்புகின்றனர் என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

ஜார்கண்டில் இதுவரை பழங்குடி முதல்வர்களாக இருந்தவர்கள், பாபுலால் மாரண்டி, சிபுசோரன், மற்றும் மது கோடா ஆகியோர்களாவர். ரகுபார் தாஸ் மட்டுமே மாநிலத்தின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல் முதல்வராவார். இப்போது சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரன் முதல்வராக அமரவிருக்கிறார்.

ஆனால் இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “பழங்குடியினருக்கு தனி மதம் என்ற அடையாளம் வழங்க முடியாததாகும். தங்கள் மதமாக அவர்கள் தேர்ந்தெடுக்க 6 மதங்களே பட்டியலிடப்பட்டுள்ளன, எனவே இந்திய பொதுப்பதிவாளர் கூறுவது போல் தனி மதம் சாத்தியமில்லை.” என்றார்.

ரஜி பாதா சர்னா பிரதான சபாவின் தர்ம குருவான பந்தன் திக்கா என்பவர் ஜார்கண்டில் 62 லட்சம் சர்னா பழங்குடியினர் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜார்கண்டிலிருந்து 42 லட்சம் மக்கள், நாடு முழுதும் 6 கோடி பேர் சர்னாவை தங்கள் மதமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இது பட்டியலில் ‘மற்றவை’ என்ற பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தலா ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட கோண்ட் மற்ரும் பீல் பழங்குடியினர் சர்னா மதப்பிரிவில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் தாங்கள் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மதம் என்ற பிரிவின் கீழ் இந்து, முஸ்லிம், கிறித்துவர், பவுத்தார், சமணர், சீக்கியர் என்ற 6 பிரிவுகள் தான் உள்ளன. பிற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், ஆனால் அதன் கோட் நம்பர்களை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

2011 சென்சஸிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால் பழங்குடியினர் கூறுவது என்னவெனில் 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மதம் என்ற பத்தியின் கீழ் 9வது இடத்தில் ‘ட்ரைப்’ என்று இருந்ததாகவும் பிறகு அது நீக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இந்தப் பிரிவு நீக்கப்பட்டதால், பழங்குடியினர் பல்வேறு மதங்களைத் தழுவினர். இதனால் பழங்குடியினர் என்ற எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x