

குடியுரிமை திருத்த சட்டம் மத ரீதியாக பாகுபாடு காட்டுவதாகக் கூறி, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், இந்த சட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் வசிப்போரிடம் முதலில் குடியுரிமைக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா என கேட்கப்படும். ஆம் என்றால் பிரச்சினை இல்லை, நீங்கள் இந்தியராக கருதப்படுவீர்கள். இல்லை என்றால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தீர்களா என்ற கேள்வி கேட்கப்படும். இதற்கு இல்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதுதான். ஆம் என்றால், எப்போது இந்தியாவில் குடியேறினீர்கள் என்று கேட்கப்படும். 2014-க்கு பிறகு குடியேறியவர்களாக இருந்தால் வெளியேற வேண்டியதுதான்.
2014-க்கு முன்பு குடியேறியவர்கள் என்றால், மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இங்கே குடியேறினீர்களா என்று கேட்கப்படும். இல்லை என்றால் வெளியேற வேண்டியதுதான். ஆம் என்று கூறுகிறவர்களுக்கு புதிய சட்டத்தின்படி இந்திய குடியரிமை வழங்கப்படும். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.