

சத்தீஸ்கர் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2840 வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி தலைவர், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளாகவே நகர்புற (காங்உள்ளாட்சிகளில் காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வந்தது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் 1283 வார்டுகளை கைபற்றும் சூழல் உள்ளது.
(காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல்)
பாஜக 1131 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் 36 வார்டுகளில் மட்டுமே முன்னில வகிக்கிறது. 364 வார்டுகளில் சுயேச்சைகள் முன்னிலை வகுத்து வருகின்றனர்.
ராய்ப்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பாஜக சார்பில் மேயர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட மூத்த தலைவர்கள் பலர் தோல்வியை தழுவியுள்ளனர். அந்த இடங்களில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதும், சுயேச்சைகளுடன் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது.