எங்கள் வலியை புரிந்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் இந்துக்கள் வேண்டுகோள்

எங்கள் வலியை புரிந்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் இந்துக்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

இந்தியத் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பாகிஸ்தானி இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடந்து வரும் வேளையில் இதற்கு எதிராக போராட வேண்டாம் எனவும் எங்களது வலியை புரிந்துகொள்ளுங்கள் என்றும் போராடும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் டெல்லியில் வாழும் பாகிஸ்தானி இந்துவான மீரா தாஸ் (40) கூறும்போது, “பாகிஸ்தானில் இருக்கும் எங்கள் வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் விட்டு இங்கு வந்துவிட்டோம். தற்போது இதுதான் எங்கள் வீடு. நீங்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் எங்கு செல்வோம்? தயவுசெய்து எங்கள் வலியை புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்பட்ட காயங்களை போக்குங்கள். இந்த சட்டத்துக்கு எதிராக போராடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஹைதராபாதிலும் பின் பாகிஸ்தானிலும் தனது உடைமைகளை விட்டு 2011-ம் ஆண்டு டெல்லிக்கு புலம்பெயர்ந்த சோனா தாஸ் (42) கூறும்போது, “நாங்கள் தாங்கிய வலிகளை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் ஒருபோதும் போராட மாட்டீர்கள். இந்த சட்டம் எங்களுக்கு ஒரு புது வாழ்க்கையை வழங்குகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in